அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.

266

அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.
அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, தன்சிரி, ஜியா பராலி, ஆகிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரம் வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கன மழையால் ஏராளமான விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் நீரில் மூழ்கி உள்ளன. அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த கனமழையால் அங்குள்ள லக்கிம்பூர் ,பக்ஸா, சிராங் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 781 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.