அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி..!

523

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.அசாம் மாநிலத்தில் கோக்ராஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் திரிபுரா மாநிலத்திலும் உணரப்பட்டதாக அம்மாநில மக்கள் தெரிவித்தனர்.