அஸ்ஸாமில் பசுக்களை மேய்த்து சென்ற இரண்டு இளைஞர்களை பசுப்பாதுவலர் அமைப்பினர் கொடூரமாக அடித்து கொலை !

356

அஸ்ஸாமில் பசுக்களை மேய்த்து சென்ற இரண்டு இளைஞர்களை பசுப்பாதுவலர் அமைப்பினர் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் கசோமோரி என்ற கிராமத்தில் அபூ ஹனீபா, ரியாசுத்தீன் என்ற இரண்டு இளைஞர்கள் தங்கள் பசுக்களை சாலையில் மேய்த்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த “கவ் ரக்‌ஷாஸ்” என்ற பசுப்பாதுகாவலர் அமைப்பினர் அவர்கள் இருவரும் பசுவை கடத்திச்செல்வதாக கூறி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர்கள் இருவரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அபூ ஹனீபா, ரியாசுத்தீன் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பசு கடத்தியதாக கூறி கடந்த மாதம் ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொலைகள் நடைபெற்ற நிலையில் அஸ்ஸாமிய இந்த இரட்டை கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.