அசாமில் தொடர் மழை காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த காண்டாமிருகம், மான் உள்ளிட்ட வன விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தன.

274

அசாமில் தொடர் மழை காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த காண்டாமிருகம், மான் உள்ளிட்ட வன விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தன.
வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் பலத்த மழையால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதிக்கரையை ஒட்டியுள்ள மக்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த மழையால் காசிரங்கா தேசியப் பூங்காவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 4 காண்டாமிருகக் குட்டிகளும்,15க்கும் மேற்பட்ட மான்களும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான விலங்குகள் இடம்பெயர்ந்துள்ளன. இது போன்ற வெள்ளக்காலத்தில் இடம்பெயர்ந்துள்ள விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தவிர்க்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.