அசாம் மாநிலம் விலங்கியல் பூங்காவில், தந்தத்திற்காக காண்டாமிருகம் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

345

காண்டா மிருகங்களின் கொம்புகளில் இருந்து புற்றுநோயை குணப்படுத்துவதற்கான மருந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு கொம்பு மட்டும் 2 கிலோவை விட அதிகமாக இருக்கும். கருப்பு சந்தையில், ஒரு கிலோ கொம்பு கோடிரூபாய் வரை விலை போவதால், ஆப்பிரிக்க காடுகளில் உள்ள காண்டா மிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. உலகில் உள்ள காண்டா மிருகங்களின் மொத்த எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு, இந்தியாவில் உள்ளதாக கூறப்படுகிறது.
அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவில் நடப்பாண்டில் 8 காண்டா மிருகங்கள் கொம்புக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மற்றொரு காண்டாமிருகத்தை சுட்டுக் கொன்ற வேட்டைக்காரர்கள், அதன் கொம்புகள், நகங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.