ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு 14வது தங்கம்..!

2266

ஆசிய விளையாட்டு குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர் அமித் முதல் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி 14வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற 49 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில், இந்திய வீரர் அமித் உஸ்பெகிஸ்தான் வீரர் ஹசன்பாயை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு குத்துச் சண்டைப் போட்டியில் கிடைக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

இதன் மூலம், இந்தியா 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 67 பதக்கள் வென்று இருப்பதன் மூலம் ஆசிய போட்டியில் இந்தியா தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.