18-ஆவது ஆசிய போட்டிகள் நாளை தொடக்கம்..!

846

18-ஆவது ஆசிய போட்டிகள் நாளை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் கோலாகலமாக தொடங்குகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசியப் போட்டிகள், கடந்த 1951ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் 18-வது ஆசிய போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்குகின்றன. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா சார்பில் 524 வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் குழு பங்கேற்கிறது. மொத்தம் 36 விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்குகின்றன. 17-வது ஆசியப் போட்டி கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.