ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன..!

383

ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இன்று தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பான் அணியை எதிர்கொண்டது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வாகை சூடியது.
2-வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி, 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தியது.