ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 5வது தங்கம்..!

723

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் குழு துடுப்பு படகு போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெள்ள முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவு போட்டியில் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றார். இலகுரக துடுப்பு படகு இரட்டையர் பிரிவு போட்டியில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் வெண்கலம் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

இதனிடையே, இரட்டையர் பிரிவு படகு போட்டியில் சவாண் சிங்க், பவன் டாட்டூ, ஓம் பிரகாஷ், சுக்மீட் சிங்க் இணை தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர். இதன் மூலம் இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.