ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது..!

1409

முதல்நாள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாடுகள் பங்கேற்கும் இந்த விளையாட்டு திருவிழாவின் முதல்நாள் போட்டியில் மல்யுத்தம், குத்துச் சண்டை, துப்பாக்கிச்சுடுதல், நீச்சல் என பல்வேறு பிரிவுகளில் இந்தியா பங்கேற்றது. இதில் மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் அபுர்வி சண்டிலா, ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர். மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சுஷில் குமார் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.
நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் நடராஜ், சஜன் பிரகாஷ் ஆகியோர் பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றம் அளித்தனர்.