ஒரே கேப்டன் தலைமையில் 200 விக்கெட்டுகள்: புதிய சாதனை படைத்தார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்

660

ஒரே கேப்டன் தலைமையில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதுவரை 59 போட்டிகளில் விளையாடி 323 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், விராட் கோலி தலைமையின் கீழ் மட்டும் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரே கேப்டன் தலைமையில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.