பிரதமர் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன் என ராகுல்காந்திக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

270

பிரதமர் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன் என ராகுல்காந்திக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் தனிப்பட்ட தொடர்பு குறித்து உண்மையிலேயே ஆதாரங்கள் இருந்தால், அதை நாடாளுமன்றத்துக்கு வெளியே தெரிவிப்பதில் ராகுல்காந்திக்கு தயக்கம் ஏன் என்று அவர்
கேள்வி எழுப்பினார். காங்கிரசுக்கு எதிரான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கும், பா.ஜ.கவுக்கு எதிராக சகாரா மற்றும் பிர்லா ஊழல் வழக்கும் உள்ளதால் இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுக உடன்பாடு இருப்பதாக கூறிய கெஜ்ரிவால், இதனால் இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் வழக்குப்பதிவு செய்யமாட்டார்கள் என்று தெரிவித்தார்.