பா.ஜ.க. ஆளும் கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

262

பா.ஜ.க. ஆளும் கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவாவில் பா.ஜக. கட்சியை சேர்ந்த லஷ்மிகாந்த் பர்சேகர் முதலமைச்சராக உள்ளார். கோவா சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்தும் வகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் இறங்க திட்டமிட்டுள்ளார். கோவாவில் 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதால், கட்சியை பலப்படுத்தும் வேலையில் ஆம் ஆத்மி இறங்கியுள்ளது. அத்துடன் கோவாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். இதனால் வருகிற கோவா சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. பாஜவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் கெஜ்ரிவால், டெல்லியை அடுத்து பாஜக செல்வாக்கான மாநிலங்களை குறிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.