பாகிஸ்தானுக்கு வாட்ஸ் அப் மூலம் உளவு பார்த்ததால், இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி அருண்மர்வா கைது ..!

928

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி அருண் மர்வா டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் இந்திய விமானப்படை தலைமை அலுவலகத்தில் குரூப் கேப்டனாக பணியாற்றி வந்த அருண் மர்வா என்பவர், ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. ராணுவ ரகசிய ஆவணங்களை பெண் ஒருவர் மூலமாக அருண் மர்வா, பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாகவும், இதற்காக வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அளித்தாகவும் ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதனையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாரால், அருண் மர்வா கைது செய்யப்பட்டார். ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விமானப்படை மூத்த அதிகாரி அருண் மர்வாவை தனிஇடத்திற்கு அழைத்துச்சென்று டெல்லி சிறப்புப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.