காஷ்மீரில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதுவும் நடக்கலாம் – பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்

202

காஷ்மீரில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் வேளையில் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை, மத ரீதியான கொள்கைகளை அருந்ததி ராய் தொடர்ச்சியா கக் கவனப் படுத்தி வருகிறார் அமெரிக்க நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், முந்தைய தேர்தலில் வளர்ச்சி என்னும் விலங்குத் தோலால் ஆன கோட்டை அணிந்திருந் தார் பிரதமர் நரேந்திர மோடி என கூறியுள்ளார். இந்த முறை வளர்ச்சியைப் பற்றி பேச முடியாது.என்பதால் ,வளர்ச்சி என்ற கோட்டை கழற்றிவிட்டு, இந்து தேசியம், தேசப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை முதன்மையாக வைத்து மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என அருந்ததிராய் கடுமையாக விமர்சித்துள்ளார்.