பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்..!

227

பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மைல்கல் திட்டங்களில் ஒன்றான இந்த ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லியில் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. நிதி இலாகாவை கூடுதலாக கவனித்து வரும் ரெயில்வே அமைச்சர் பியூ‌ஷல் கோயல் தலைமையில் நடந்த விழாவில், நிதி மந்திரி அருண் ஜெட்லி காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பெட்ரோலிய பொருட்களும் ஜி.எஸ்.டி.க்கு கீழே கொண்டுவரப்படும் என்றார். மாநிலங்கள் தங்கள் வருவாய் நிலையில் வலுவான நிலையை எட்டியதும், பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என நம்புவதாக, அருண்ஜெட்லி கூறினார்.