ஜிஎஸ்டி சட்டம் வரும் செப்டம்பர் 16-க்கு முன் அமலாகும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டம் !

95

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதிக்கு முன் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் எழுச்சிமிகு குஜராத்தின் 8வது மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரக்கு மற்றும் சேவைகள் வரி , ஜிஎஸ்டியும், உயர்கரன்சி விலக்கலும், வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் , அதன் தாக்கம் இந்த ஆண்டுதான் தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த கரன்சி விலகல், சுத்தமான, அதிகரித்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஜி எஸ்டி தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறிய அவர், இன்னும் சில முக்கிய பிரச்சினைகள் அடுத்த சில வாரங்களில் தீர்க்கப்பட்டு விடும் என நம்பிக்கை தெரிவித்தார். எனவே, வரும் செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு முன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்றும் அருண்ஜெட்லி உறுதிபட கூறியுள்ளார்.