உலகில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்-நிதியமைச்சர் அருண் ஜெட்லி!

367

உலகில் வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார் .
இதில், 2018-19ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7 புள்ளி 5 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலிறுதியில், வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஆய்வறிக்கை கூறுகிறது.
நேரடி அன்னிய முதலீடுகளுக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ள ஏற்றுமதி, வரும் நிதியாண்டில் அதிவேக வளர்ச்சி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.