பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் இன்று ஆலோசனை – மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

610

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

வழக்கமாக நடைபெறும் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம்தான் இது என்றாலும், பொதுத் துறை வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வராக் கடன் சுமையை எதிர்கொண்டுள்ள நேரத்தில் நடைபெறும் முக்கிய கூட்டமாக கருதப்படுகிறது. பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வங்கிகளை வராக் கடன் சுமையில் இருந்து மீட்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.