ஆறுமுகசாமி ஆணையம் முன்பு முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆஜர்..!

522

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜரான அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் மற்றும் மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.

சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன், அப்போலோ முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், மருத்துவர்கள் வெங்கட்ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் குறுக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகி தங்கள் தரப்பிலான விளக்கத்தை அளித்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார்.