ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் வருகை..!

220

அப்போலோ மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதாவின் தனி செயலாளர் ஆகியோர் ஜெயலலிதா விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகினர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்ப்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையிலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சிகள் தொடர்பான குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆணையத்தில் ஆஜராகும் நபர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அப்பல்லோ தலைமை பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ராஜ்பிரசன்னா, இருதய நோய் சிகிச்சை மருத்துவர் மருத்துவர் சாய் சதிஸ், ஜெயலலிதாவின் 3வது தனி செயலாளர் இராமலிங்கம் ஆகியோர் இன்று வருகை புரிந்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார்.