ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆஜர்..!

256

அமெரிக்கா சென்றதாக சொல்லப்பட்ட முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக வந்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலத்தை ஆறுமுகசாமி பதிவு செய்துள்ளார். இதில் சிலரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அவ்வபோது குறுக்கு விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக வந்தார்.

ஆனால் அவருக்கு இன்று விசாரணை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் திரும்பி சென்றார். நேற்று சிபிஐ சோதனையின் போது, ஜார்ஜ் அமெரிக்க சென்றிருந்ததாக தகவல் வந்த நிலையில், இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானது எப்படி என சந்தேகம் எழுந்துள்ளது. வேறு ஒரு தேதியில் ஆஜராகும்படி ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தை ஜார்ஜ் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.