நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெ. தீபா, மாதவன் ஆஜர்..!

455

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெ. தீபா மற்றும் மாதவன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பதற்காக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், பல்வேறு தரப்பினரும், ஆறுமுகசாமி ஆணையத்தில், நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.

இதனையடுத்து, ஜெ.தீபா, மாதவன், அப்போலோ மருத்துவர்கள் உட்பட பலருக்கு குறுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், ஜெ. தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் மருத்துவர் சரவணன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆணூர் ஜெகதீசன் ஆகியோர் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.