ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் நேரில் ஆஜர்..!

130

ஜெயலலிதாவுக்கு தாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, அப்போலோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகினர். நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.சி.கில்னானி, மயக்கவியல் மற்றும் சிசியூ மருத்துவர் அஞ்சனத்ரிகா, இதயநோய் சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு தாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டதாக அவர்கள வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதா அப்போலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரும் 2-வது நாளாக இன்றும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.