ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பில், ஆறுமுகசாமி விசாரணை..!

412

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வெங்கட்ராமன் , மற்றும் மருத்துவமனையின் ஆவண காப்பாளர் கோவிந்தராஜன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இதனையடுத்து பல்வேறு தரப்பில், ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, அப்போலோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரித்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வெங்கட்ராமன் மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஆவணக் காப்பக மேலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.