ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தலைவனின் மகன் கைது..!

224

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தலைவர் சையது சலாஹூதின் மகனை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் பதுங்கியிருந்த போது , அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தலைவனின் இரண்டாவது மகன் என்பது தெரியவந்தது. சையத் சலாஹூதீனின் மற்றொரு மகன் சையத் ஷாகீத்தை என்ஐஏ பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பலர் பதுங்கி இருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.