அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி கைது..!

170

கோவையில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான சின்னச்சாமியை சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான சின்னச்சாமி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அண்ணா தொழிற்சங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சின்னச்சாமியை தொழிற்சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, முதலமைச்சர் இபிஎஸ், துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, இருவரையும் துரோகிகள் என விமர்சித்த சின்னச்சாமி, தன்னை நீக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், அவர் தற்போது டிடிவி. தினகரன் அணியில் இணைந்துள்ளார்.

இதனிடையே, சின்னச்சாமியை சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தபோது, 8 கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரில் கைது செய்யப்பட்ட சின்னச்சாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, சின்னச்சாமியை விசாரணைக்காக சென்னைக்கு போலீஸார் அழைத்து வந்துள்ளனர்.