தடுப்பணையில் குளித்ததை தட்டிக் கேட்ட ஆந்திர போலீஸ் மீது தாக்குதல்..!

637

வாணியம்பாடி அருகே தடை விதிக்கப்பட்ட தடுப்பணையில் குளித்ததை தட்டிக் கேட்ட ஆந்திர போலீசாரை தாக்கிய சிஆர்பிஎப் காவலர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக எல்லையான புல்லூரில் ஆந்திர அரசால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பியதை அடுத்து, அணையில் குளிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தடுப்பணையில் தடையை மீறி, சிஆர்பிஎப் காவலர் உட்பட 4 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். இதனைக்கண்ட ஆந்திர போலீஸார், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, அதனால் எழுந்து செல்லுங்கள் என தட்டிக்கேட்டபோது, 4 நபர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குப்பம் போலீஸார், படுகாயமடைந்த 2 போலீஸ்காரர்களையும், மீட்டு, அவர்களை தாக்கிய பாதுகாப்புப்படை வீரர் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.