தன் மீதான வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க தயார்-நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்…

607

தன் மீதான வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் கருணாசை கைது செய்த போலீசார் அவரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது கருணாஸ் ஆதரவளார்கள் தமிழக அரசைக் கண்டித்துக் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆதரவளார்களின் பலத்த கோஷத்திற்கு இடையெ அழைத்து வரப்பட்ட கருணாஸ் போலீஸ் வேனில் ஏற்றப்படுவதற்கு முன்பாக பேசிய போது, துப்பாக்கியால் சுட்டாலே நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் இனத்தைச் சேர்ந்தவன் நான் என்றும் சீவலப்பேரி பாண்டியைப் போல துணிவுடையவன் என்றும் ஆவேசமாகப் பேசினார். காவல் துறையினரின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன் என்று கூறிய அவர் வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன் என்றும் கூறினார்.