பேரறிவாளனுக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் – அற்புதம்மாள்

147

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை வண்டலூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்கது என்று தெரிவித்தார். மேலும், இந்த முறை தனது மகனுக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்றும் அற்புதம்மாள் நம்பிக்கையுடன் கூறினார்.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் மாலைமுரசு செய்தியாளருக்கு பேரறிவாளன் சகோதரி அன்புமணி அளித்த பேட்டியில், தமிழக அரசு காலதாமதமின்றி, பேரறிவாளனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.