மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு அர்ஜுன் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு!

218

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் 3-ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பாக திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ் மசூதி வழியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார். அர்ஜுன் சம்பத்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரு மதத்தினரிடையே கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற வகையில் பேசியதாக அர்ஜூன் சம்பத் மீது ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.