அரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

317

அரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தளவாய் என்ற பகுதியில் உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, லாரிகளில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குவாரிகளில் மணல் அள்ளவந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை காரணமாக குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.