அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

96

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருகே கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரவேந்தன், இவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவர் தனது வேலையின் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சியம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கடுகூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கோப்பிலியங்குடிகாடு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி இவரது வானத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வீரவேந்தன், கொளஞ்சியம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து வந்த போலீசார் லாரி ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்வதாகவும், இதனை தடுக்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்