அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை லட்சம் ரூபாய் கொள்ளைபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

311

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை லட்சம் ரூபாய் கொள்ளைபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜாலிகான் என்பவர், அரியலூர் வண்டுகாரத் தெருவில் வசித்து வருகிறார்.இவர், அரியலூரில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஜாலிகான் தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் சென்றுள்ளார். இதனிடையே, இவரது தம்பி இக்பால் அண்ணன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் உடைக்கப்பட்டு 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து இக்பால் அரியலூர் போலீசாரிடம் புகார் அளித்தை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் நகரில் பூட்டிய வீட்டில் பணம் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.