அரியலூரில், தடை செய்யப்பட்ட நேரத்தில் இயங்கிய 4 டிப்பர் லாரிகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

321

அரியலூர் மாவட்டத்தில் 7 சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இந்த சிமெண்ட் ஆலைகளுக்கு ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகள் இயக்கப்படுகின்றன. டிப்பர் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என கூறி, பள்ளி நேரங்களில் டிப்பர் லாரிகளின் போக்குவரத்தை தடை செய்யவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து, கடந்த 9-ஆம் தேதிமுதல் காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் டிப்பர் லாரிகளை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், தடை விதிக்கப்பட்ட நேரத்தில் விகைகாட்டி பகுதியில் இயக்கப்பட்ட 4 டிப்பர் லாரிகளை பறிமுல் செய்த வருவாய் துறையினர், அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.