அரியலூர் மாணவி அனிதா சகோதரருக்கு அரசுப்பணி!

851

நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பணி நியமன ஆணை வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதாவின் தந்தையிடம் ஏழு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இதேபோன்று, அனிதாவின் சகோதரர் சதீஷ்குமாரிடம் அரசு பணி நியமனத்துக்கான ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார். சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.