அரியலூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சமயத்தில், இரண்டு வீடுகளில் நுழைந்த கொள்ளையர்கள் 13 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

295

அரியலூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சமயத்தில், இரண்டு வீடுகளில் நுழைந்த கொள்ளையர்கள் 13 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கச்சிபெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். ஆசிரியரான இவர், தனது குடும்பத்துடன் அதே கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதேபோன்று அவரது பக்கத்து வீட்டில் வசித்துவரும் அவரது தம்பி கண்ணன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 3 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.