அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வரும் 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

296

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வரும் 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தவேண்டும் எனவும் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.

கழகத்தின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடன் இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தவேண்டும் என கூறியுள்ள அவர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் சிறப்புரையாற்றுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.