காலில் விழ வேண்டாம் – திமுக தலைமைக்கழகம்

237

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வரும் நிர்வாகிகளும் ,தொண்டர்களும் அவரது காலில் விழ வேண்டாம் என திமுக தலைமைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் ஆர்வ மிகுதியால் அவரது காலில் விழுவதை தவிரக்க வேண்டும் என்றும், வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவிப்பதே திமுக போற்றி வளர்த்து வரும் பண்பாட்டுக்கு பெருமை சேர்க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாலைகள் சால்வைக்கு பதிலாக புத்தகங்களை பரிசளிப்பதே சாலசிறந்தது என்றும் அனைத்து விழாக்களில் வழங்கப்படும் புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள பல நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என்றும் திமுக தலைமையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிகழ்ச்சி குறித்து அறிந்திட முக்கியமான இடங்களில் ஒருசில பதாகைகள் போதும் என்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகதிக அளவிலான பேனர்கள் தவிரக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பேனரக்ளுக்கு பதிலாக திமுகவின் கொடிகளையும் தோரணங்களையும் கட்டி நிகழ்ச்சிகளை சிறப்பிக்க வேண்டும் என்றும் திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.