சொத்து வரியை 100 விழுக்காடு உயர்த்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்..!

389

மக்கள் மீது சுமையை ஏற்றும் விதமாக சொத்து வரியை 100 விழுக்காடு உயர்த்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமலும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் அலட்சிய போக்கில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டியுள்ளார். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 3 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி தடைப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வைகோ, இதனால், அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் மீது ஒரே சமயத்தில் சொத்து வரியை 100 விழுக்காடு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் உரிய வகையில் சொத்து வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.