அரிசோனா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தலைநகர் பீனிக்ஸ் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

242

அரிசோனா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தலைநகர் பீனிக்ஸ் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தலைநகர் பீனிக்சில் பல்வேறு பகுதிகள்
வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. மரிகோப்பா பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. வடகிழக்கு அரிசோனாவில், இன்றும் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு முடுக்கி விட்டுள்ளது.