அர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் கடந்து பின்லாந்த் வீரர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

296

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் கடந்து பின்லாந்த் வீரர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கார்பந்தய போட்டி அர்ஜெண்டினாவின் கார்டோபா நகரில் நடைபெற்றது. பின்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். கரடு முரடான பாதையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில், ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு அதிக வேகத்தில் காரை செலுத்தி பந்தய தூரத்தை கடந்து வந்தனர். இதில் 4 நிமிடங்கள் 2 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து பின்லாந்து வீரர் ஜரி மாட்டி லாத்வலா முதலிடத்தை பெற்றார். நியூசிலாந்து வீரர் ஹேடன் இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டானி சர்டோ 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.