மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் திடீர் ராஜினாமா..!

211

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், அரவிந்த் சுப்ரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவருக்கு மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில், அரவிந்த் சுப்ரமணியன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் சுப்ரமணியனிடம் காணொலி காட்சி மூலம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் வசிக்க விரும்புவதால், தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்ததை சுட்டிக் காட்டியுள்ளார். அரவிந்த் சுப்ரமணியன், ரிசர்வ் வங்கியின் ஆளுனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.