பா.ஜ.க.-வை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் |அரவிந்த் கெஜ்ரிவால்

116

டெல்லியில் பா.ஜ.க.-வை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலை எதிர்நோக்கி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதன் ஒருபகுதியாக, தெற்கு டெல்லி தொகுதியில் கட்சியினரை சந்தி்த்த கெஜ்ரிவால், மக்களவை தேர்தல் பணிகள் குறித்த வியூகங்களை ஆசேலாசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலில், ஆம் ஆத்மிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.வை ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தி வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டார்.