அரசு கொறடா ராஜேந்திரனை நீக்க வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் தினகரன் அணி சார்பில் மனு தாக்கல்..!

337

அரசு கொறடா ராஜேந்திரனை நீக்க வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் தினகரன் அணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். அப்போது, அரசு கொறடா ராஜேந்திரன் அதிகார துஷ்பிரோயகத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, அரசு கொறடா பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் அவர் வலியுறுத்தினார். இது குறித்து சட்டப்பேரவை உரிமைக்குழுவிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என வெற்றிவேலிடம் சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதையடுத்து, தலைமைச்செயலகத்திலிருந்து வெற்றிவேல் புறப்பட்டுச்சென்றார்.