ஒரு சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் கோளாறு | வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் திணறல்

130

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

அரக்கோணத்தில் உள்ள காட்பாடி சேண்பாக்கம் போன்றஇடங்களில் வாக்கு எந்திர கோளாறால் வாக்கு பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி சேண்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காட்பாடியில் இளம் வாக்காளர் மாணவி வைதேகி முதன் முதலில் வாக்களிப்பதை மாவட்ட ஆட்சியர் ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆனால் ஆட்சியரின் முன்னிலையில் மாணவி வாக்களிக்க முயன்ற போது வாக்கு எந்திரம் பழுதானதால் , வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. வாக்கு எந்திரத்தை சரி செய்யும் முயற்சியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.