அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துகள் என்ன என்பதை இப்போது காண்போம்.

646

அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துகள் என்ன என்பதை இப்போது காண்போம்.
செப்டம்பர் 22ம் தேதி, காய்ச்சல், நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செப்டம்பர் 23ம் தேதி, முதல் மருத்துவ அறிக்கையில் முதலமைச்சர் உடல்நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.

செப்டம்பர் 24ம் தேதி, ஜெயலலிதா சாதாரண உணவுகளை உட்கொள்வதாக தகவல் அளித்தனர்.

செப்டம்பர் 25ம் தேதி, மேல் சிகிச்சைக்காக முதலமைச்சர் சிங்கப்பூர் செல்கிறார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

செப்டம்பர் 27ம் தேதி, காவிரி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சருடன் நடைபெற்றதாக தகவல் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 29ம் தேதி, ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்தனர்.

அக்டோபர் 2ம் தேதி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அக்டோபர் 3ம் தேதி, தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் முதலமைச்சருக்கு செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.

அக்டோபர் 4ம் தேதி, ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் அப்போலோ நிர்வாகம் தகவல்.

அக்டோபர் 6ம் தேதி சென்னை வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் மற்றும் அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.

அக்டோபர் 8ம் தேதி, நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அக்டோபர் 10ம் தேதி, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதேபோல, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் அப்பல்லோ வந்தனர்.

அக்டோபர் 21ம் தேதி, தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.

நவம்பர் 14ம் தேதி, அ.தி.மு.க., மூத்த உறுப்பினர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு, அவரது மகனிடம் ஜெ., தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்.

நவம்பர் 19ம் தேதி, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.

நவம்பர் 22ம் தேதி, மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து ஜெயலலிதா மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

டிசம்பர் 4ம் தேதி, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை .வெளியீடு

டிசம்பர் 5ம் தேதி, ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அப்போலோ மருத்துமனை அறிக்கை வெளியிட்டது.