ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்தது அப்போலோ..!

227

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான மருத்துவ ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவனை நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. அரசு மருத்துவர்கள், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயலலிதாவின் தனி உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிசிக்சைகள் குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு நீதிபதி ஆறுமுகசாமி காலக்கெடு விதித்திருந்தார். இதன்படி, இரண்டு பெட்டிகளில் மருத்துவ ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்தது.