கணினியை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அதிகாரம் | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

114

கணினிகளை கண்காணிக்க சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டில் உள்ள எந்த கணினியையும் கண்காணிக்கும் அதிகாரத்தை சிபிஐ, அமலாக்கத்துறை, உளவுத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி எந்த கணினியில் உள்ள தகவல்களை கண்காணிக்கவும் இடைமறித்து பெறவும் இந்த அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இதுதொடர்பாக 6 வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.