ஆந்திரா கல்குவாரியில் வெடி விபத்து – 12 பேர் பலி

219

ஆந்திராவில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்…

கர்னூல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரி ஒன்றில் அதிகளவில் டெட்டர்னேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி பாறையை வெடிக்க செய்துள்ளனர். அப்போது அருகே இருந்த வெடி மருந்துகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தினால் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் வெடி விபத்து குறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.